வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ...பள்ளிக்கல்வித்துறையிடம் கேள்விகேட்ட இஸ்லாமிய அமைப்பு காரணம் என்ன?
nera ramanathapuram school students Dont come to school wearing a burqa
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட இஸ்லாமிய மாணவி புர்கா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்ததாக வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையறிந்த அம்மாணவியின் தாய், தமிழக அரசு அப்படி ஒரு விதி எதுவும் போடவில்லை என நிரூபித்தால் அனுமதிப்பீர்களா என்று தலைமையாசிரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், இஸ்லாமிய தனியார் அமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு மாணவிகள் வருவது தொடர்பாக தமிழக அரசிடம் கேள்விக் கேட்கப்பட்டது.
அதற்கு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் "முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து கல்வி பயில தடை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
nera ramanathapuram school students Dont come to school wearing a burqa