வேளாங்கண்ணி : இருதரப்பு மீனவர்களிடையே தகராறு..! 10 பேர் காயம்: 7 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நேற்றுமுன் தினம் ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன் என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் இரண்டு ஆண்டுகளுக்கான வரவு மற்றும் செலவு கணக்குகளை கேட்டுள்ளனர். 

அதன் படி, சத்தியசீலன் வரவு, செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளார். அந்தக் கணக்கில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், கூட்டம் முடிந்த பின்பு அனைவரும் கலைந்து சென்று விட்டனர். 

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் மீனவ பஞ்சாயத்தின் தலைவர் மகன் ஆறுமுகத்தின் தரப்பினருக்கும், தற்போது தலைவராக உள்ள சத்தியசீலன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் அதிகரித்ததால் இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி மோதி கொண்டனர். 

இந்த மோதலில் சத்தியசீலன், ரவிச்சந்திரன், முத்துசெட்டி, கிருஷ்ணன், செல்வம், ஆறுமுகம், ஜெகநாதன், ஜான்பீட்டர், ரீகன், மணியன் உள்ளிட்ட பத்து பேர் காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் காயம்,அடைந்தவர்களை மீட்டு, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இருதரப்பினர் கொடுத்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், செல்லப்பா, முரளி, மணி, ராஜேஷ், பாஸ்கர், கதிர்வேல் உள்ளிட்ட ஏழு பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nera velanganni seven peoples arrested for fishermans fight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->