தீபாவளி எதிரொலி - மதுபானக் கடைகளில் புதியவகை பீர்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடைகளில் நவம்பர் 10ம் தேதி முதல் ஹண்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் கிடைக்கும். இதே போல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் டிசம்பர் மாதத்துக்கு பின்னர் பல வெளிமாநில பீர்களும் விற்பனைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் எஸ்.என்.ஜே குழுமத்திடம் இருந்து பார்லி பீர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே வெளிமாநில நிறுவனங்கள், பீர்களை குளுமையாக விற்பனை செய்ய பிரிட்ஜ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பேச்சுவார்த்தையும் அதிகாரிகள் தரப்பில் நடந்து வருகிறது. 

தமிழக மதுபானக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேஹர் பீர், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே என்று கிட்டத்தட்ட முப்பத்தைந்து வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமும் 50 லட்சம் பெட்டிகள் வரை விற்பனையாகி வரும் நிலையில், கோடைக்காலத்தில் பீர் விற்பனை 65 லட்சம் பெட்டிகளாக அதிகரிக்கிறது. தற்போது மேலும் புதிது புதிதாக பல ரகங்களில் பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால்  பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new brand beer sales in tasmac for deepavali festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->