கிளம்பாக்க பேருந்து நிலையத்திற்கு புதிய சிஇஓ நியமனம்.! - Seithipunal
Seithipunal


வெளியூர்களில் தங்கி படிக்கும் மற்றும் வேலை செய்யும் பொதுமக்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். 

இவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து  நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதற்கு முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நில நிர்வாக ஆணையரக இணை இயக்குனர் பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதனால், கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை சி.இ.ஒவாக நியமிக்கப்பட்ட பார்த்தீபன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new ceo appointed to kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->