சென்னையில் நாளை 12 மணி முதல் புதிய கட்டுப்பாடு.. சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் தொற்றை தடுக்கவும், தமிழக அரசியல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவது முற்றிலும் தவிர்க்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. 

நாளை இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகள் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. ஆனால் அனைவரும் வீடுகளில் அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போதுள்ள சூழ்நிலைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, மேலும்‌ கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல்‌ அத்தியாவசிய தேவைகள்‌ தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள்‌ அனைவரும்‌ மேலே குறிப்பிட்ட 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள்‌ பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new control in chennai from 12 am noon tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->