திண்டுக்கல்.! திருமணமான புதுபெண் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான புது பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கு கடந்த மாதம் வெண்ணிலா(21) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது.

இந்நிலையில் வெண்ணிலா அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவது மற்றும் டிக் டாக் பார்ப்பது போன்று செல்போனிலயே மூழ்கி இருந்தார்.

இதனை கணவர் மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த வெண்ணிலா தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வெண்ணிலாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New married girl drink poison in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->