தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை விநியோகம்.! - Seithipunal
Seithipunal


குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலமாக பெற்று பயன் பெறும் வகையில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 7.5.2021 முதல் 30.6.2023 வரை 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இணைய வழி மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,509 புதிய குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இந்தக் குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களிடம் சேருவதற்கு முன்னரே அட்டைதாரர்கள் அவர்களுக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளில் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் செயலாக்கம் செய்யப்பட்டு அந்த விவரம் குடும்ப அட்டை எண்ணுடன் அட்டைதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டை எண்ணை கடைப் பணியாளரிடம் தெரிவித்து விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் நியாயவிலைக் கடையில் அவர்களுக்கான இன்றியமையா பண்டங்களை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new ration card provide in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->