பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இனி புதிய ரேஷன் கார்டு கிடையாது.. தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மகளிருக்காண மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தத் திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத்தவை வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முகாமிற்கு வந்து கொடுக்கும் தேதி நேரம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த டோக்கன் வழங்கும் பணிகள் ஜூலை 20ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கும் அல்லது ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டில் பெயர் சேர்த்து புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கும் பலரும் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெரும் வரைக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New ration card stop for womens 1000 ruppes scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->