இனி 15 நாட்களில் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு.. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுமக்களின் வசதிக்காக அரசு பல்வேறு வசதிகளை கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அதன்படி ரேஷன் கார்டு தொலைந்தால் ஆன்லைன் மூலம் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வீட்டிற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 45 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்ட நிலையில் தற்போதைய 15 நாட்களில் வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New ration card will be issued in 15 days in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->