வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா: சென்னையில் ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி உலக நாடுகள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஊடுருவியதால் தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து பலரும் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

தற்போது கொரோனா உருமாறி புதிய வகை கொரோனாவாக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (வயது 58) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நேற்று தமிழ்நாட்டில் 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new type Corona increasing Chennai person died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->