#Neyveli || என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தின் இரண்டாவது நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான ஊதியம், பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவை வழங்கப்படுவதில்லை. 

இந்த நிலையில் இன்று நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neyveli NLC contract workers protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->