கள்ளச்சாராய விவகாரம்.. களமிறங்கிய மனித உரிமை ஆணையம்.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி..!! - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் குடித்து கடந்த 12ஆம் தேதி முதல் தற்பொழுது வரை 21 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாகும் பட்சத்தில் அது மக்களின் உரிமையை பறிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கள்ளச்சாராயத்தை விற்பது மற்றும் அருந்துவதை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதிவு செய்துள்ள வழக்குகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணம், கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NHRChas directed TNgovt to submit detailed report on liquor death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->