மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.!
nia officers raide in mayiladuthurai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐந்து இடங்களிலும், மயிலாடுதுறையில் பதினைந்து இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் சுமார் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.
English Summary
nia officers raide in mayiladuthurai