என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி... தமிழ்நாட்டில் 20 இடங்களில் தீவிர சோதனை!
NIA officials in action Raids at 20 places in Tamil Nadu
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறையில் 20 உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/zhp155jp-4euye.png)
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.
இதேபோல திருமுல்லைவாசலை சேர்ந்த பாசித், எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகள் உள்பட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என தற்போதுவரை தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
NIA officials in action Raids at 20 places in Tamil Nadu