தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை! கோவையில் மட்டும் 20 இடங்கள்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இவர் சதித்திட்டத்துடன் காருக்கு குண்டு வெடிப்பு நிகழ்த்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கின. ஜமேஷா முபின் கூட்டாளிகளாக கருதப்படும் ஆறு பேரை தனிப்படையினர் கைது செய்தனர். இவர்கள் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை உக்கடம் அடுத்த புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கோவை மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையானது தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர்,1 ரத்தினபுரி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சென்னை மற்றும் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று தமிழக முழுவதும் சென்னை, கோவை, நாகை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 45 இடங்களில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA Officials raid 45 places all over Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->