சென்னையில் இரவு நேர மோட்டாா் பந்தயம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேர மோட்டார் பந்தயம் வரும் டிசம்பர் 9,10 தேதிகளில் நடைபெற உள்ளது என இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் நேற்று தெரிவித்திருப்பதாவது, ''இந்திய மோட்டார் விளையாட்டுகள் வரலாற்றில் பெருநகர சென்னை, மாநகராட்சி சென்னை, மாநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஃப்ரமோஷன் இணைந்து சென்னை 'பார்முலா ரேசிங் சர்க்யூட்' பந்தயத்தை நடத்த உள்ளது. 

சென்னை தீவு திடல் மைதானத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு இரவு நேர பந்தயம் நடத்தப்பட்ட உள்ளது. 

இந்திய மற்றும் தெற்கு ஆசியா பகுதிகளில் இரவு நேர பந்தயம் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து ஆண், பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். 

எஃப்ஐஏ சான்றளிக்கப்பட்ட பந்தயம், எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் என்பது ஆகும். இந்த பந்தயத்தை தமிழகத்தில் நடத்துவதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்'' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை 'ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்' பந்தய இலச்சினையையும் அவர் அறிமுகபடுத்தினர். இந்த நிகழ்வின் போது விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு தலைவர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Night motor racing in Chennai Minister Udayanidhi Stalin announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->