எச்சரிக்கையா இருங்க! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
Nipha Virus Tamilnadu
நிஃபா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று, தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் தேதி, கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிசோதனையின் முடிவில் உறுதியானது.
ஏற்கனவே கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸால் ஒரு நபர் உயிரிழந்த நிலையில், நிஃபா வைரசால் அம்மாநிலத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நிஃபா வைரஸ் பரவாமல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல்லைப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் சோதனை நடைபெற வேண்டும் என்றும், நிஃபா வைரஸ் குறித்த அறிகுறிகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட சுகாத்துரை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.