உங்களுக்கு பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் - தாழ்மையுடன் கேட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! - Seithipunal
Seithipunal


வருகின்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு அரங்கேறவுள்ளது.

சோழ சாம்ராஜ்யத்தின் அதிகார பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள் டெல்லி சென்று உள்ளனர். திறப்பு விழா நிகழ்ச்சியின் போது அந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.

இந்தியாவின் சுதந்திரத்தின் அடையாளமாக இந்த செங்கோல் அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக. காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், "செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் கவுரவிக்க உள்ளார். திருவாவடுதுறை, தருமபுர, மதுரை உள்பட 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள்.

பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman New Parliament Building PMModi Sengol


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->