ரூ.5000 கோடி என்ன ஆனது? - ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கிடுக்குப்புடி கேள்வி! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு குறைத்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், "சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு உடனடியாக 900 கோடி ரூபாயை ஒதுக்கினோம். 

5000 கோடி முறையாக செலவிட்டிருந்தால் மிக்சாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது என்று தெரியவில்லை. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்.

5000 கோடி ரூபாயில் 90 சதவீதம் செலவழித்து மழை நீர் வடிகால் பணிகளை செய்ததாக தெரிவிக்கிறார்கள். ஆனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புக்கு பின் 90% மழை நீர் வடிகால் பணிகள் முடியவில்லை என்கிறார்களே... 

தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது. குஜராத்தில் மட்டும்தான் போதைப்பொருள் கைப்பற்றபடுகிறதா? தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை என்ன சொல்வது? என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman say about Chennai flood issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->