வளர்ச்சி பாதையில் சரியாக இந்தியா பயணிக்கிறது.? நிர்மலா சீதாராமன் உரை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், " IIITDM 10 ஆண்டுகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறது.

இதில் பல பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற பின்னும், அர்ப்பணிப்போடு பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன். வரும் காலத்தில் சிறப்பு அந்தஸ்து பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் தேவை. உற்பத்தி நிறுவனங்களின் தேசமாக இந்தியா மாறுவது அவசியம். இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வரும் 2028-ல் இந்தியாவில் சீனாவை விட உழைக்கும் வர்க்கத்தனர் அதிகப்படியாக இருப்பார்கள் என்று ஐநா சபையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். உலகளவில் தலை சிறந்த 58 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் தான் இருக்கின்றனர். வரும் காலங்களில் இதே நிலை தொடர வேண்டுமானால் மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் நிறுவனங்களில் வேலை செய்வதை விட தொழில் முனைவோராக மாறி நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு உயர வேண்டும்."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman speech In IIINMT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->