என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ்!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மாதம் 50 ஆயிரம் ஊதியம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26ம் தேதி முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் என்எல்சிக்கும், என்எல்சி ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி என்எல்சி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம் செய்ய இருப்பதாகவும், இது குறித்து இரு தரப்பும் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஒப்பந்த தொழிலாளர்கள் முடிவு செய்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழில் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பேசிய மாவட்ட ஆட்சியர் "சென்னை உயர்நீதிமன்றம் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதற்கு முடிவு செய்து ஒரு மாத சிறப்பு இரண்டாம் தேதி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

எனவே அதுவரையில் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்தால் தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் என்எல்சி நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் கட்டுப்பட வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்டு என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதல் வேலைக்கு திரும்புவதாக அறிவித்தனர். மேலும் இந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட 20 தொழிலாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை என்எல்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC contract workers strike temporarily called off


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->