"என்எல்சி வேண்டாமே" - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நேரடியாகவே அறிவுரை! - Seithipunal
Seithipunal


"அணு & அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும். காவிரி நதி மீது சூரிய மின்சக்தி ஆலைகளை அமைத்தால் என்.எல்.சி-யில் இருந்து கிடைக்கும் அளவுக்கு மின்சாரம் கிடைத்துவிடும்.

அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் எதிர்பார்த்து காது கொண்டிருக்கிறது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தடை கோரி என்எல்சி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு நீதியரசர் தண்டபாணி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதியரசர் தண்டபாணி அவர்கள், "என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்றும் தொழிலாளர் சங்கத்தினருக்கு நீதியரசர் தண்டபாணி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC MadrasHC Cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->