அத்துமீறி நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை.!! எச்சரிக்கை பலகையை ஊன்றிய என்எல்சி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே விவசாய நிலத்தினை கையகப்படுத்தியது. அதன்படி சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 25,000 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்தி இருந்தது. 

என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தி இருந்தாலும் அந்த நிலம் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தினை மீண்டும் என்எல்சி நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கையில் ஈடுபட்டது.

நிலத்தை மீண்டும் என்எல்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க மறுத்த விவசாயிகள் கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.  இந்த நிலையில் வளையமாதேவி பகுதியில் என்எல்சி நிறுவனம் பரவனாறு மாற்று பாதை அமைக்கும் பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டது.

அப்போது விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து என்எல்சி நிறுவனம் தனது கட்டுமான பணியை தொடங்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னைக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நெற்பயிர்களை அழித்ததற்காக என்எல்சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தீர்களா? வேலி அமைத்தீர்களா? எச்சரிக்கை பலகை வைத்தீர்களா? என என்எல்சி நிறுவனத்திற்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து அழிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40,000 வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் என்எல்சி நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மன்றம் அறிவுறுத்தி இருந்தது.

 

இந்த நிலையில் கரிவெட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் என்எல்சி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் அறுவடை பணிகள் தற்போது நிறைவுற்ற நிலையில் எனர்ஜி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை பலகையில் "இந்த இடம் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது. அத்துமீறி உள்ளே நுழைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என குறிப்பிட்டு பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவின் படி வைக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC putting up warning signs on acquired agricultural lands Cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->