வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு வரம்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை- போக்குவரத்து காவல்துறை தகவல் - Seithipunal
Seithipunal


வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு வரம்பு 40 கிலோ வரை மீட்டர் தான் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு என்பது 40 கிலோ மீட்டர் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானதில் இருந்தே பல விமர்சனங்கள் எழுந்தது. 

இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளது. வேக கட்டுப்பாட்டு வரம்பு இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஆய்வுக்காக மட்டுமே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வேகத்தை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு இப்போது அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு சாலைகளில் உள்ள வேகங்கள் கணக்கிடப்பட்டு அதன் பிறகு வேக கட்டுப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் அனுப்பும் தகவல்கள் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No final decision yet on speed limit for vehicles Traffic Police Information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->