#சென்னை || 40 கி.மீ வேகம் தாண்டினால் அபராதம் இல்லை.. U-turn போட்ட காவல் துறை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை மாநகர் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் "சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். அதேபோன்று இரவில் 50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட வேகத்தை தாண்டி வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

சென்னையின் பல்வேறு சாலைகளில் ஸ்பீட் ரேடார் கன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணாநகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கருவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் வாகனங்களை படம் பிடித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு வழக்கு பதிவு செய்த விவரங்களை உடனடியாக அனுப்பும்" என அறிவித்திருந்தார்.

சென்னை காவல் ஆணையரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியிலும், வாகன ஓட்டிகள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்த நிலையில் தற்போது 40 கிலோ மீட்டருக்கு வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் அமைந்துள்ள  சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகம் கணக்கிடும் பணியை தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சாலைக்கும் ஏற்றார் போல் சராசரி வேகம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no fine exceed vehicle speed of 40 km in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->