4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இயங்குமா? - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!
no leave to four district school and colleges
பருவ மழை மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ததையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த 'ரெட் அலர்ட்' விலக்கி கொள்ளப்பட்டது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதையடுத்து இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
English Summary
no leave to four district school and colleges