தமிழகத்தில் இனி பட்டாசு ஆலைகள் இயங்காது?.... மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வெடி விபத்தில் சிக்கியவர்களை தீவிரமாக மீட்டனர்.

வெடி விபத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வந்த அதே சமயத்தில், கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குருமூர்த்தி என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வெடி விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No more firecracker factories in Tamil Nadu District administration action


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->