இனி மதுபான கடைகளில் சலுகை விளம்பரங்களுக்கு தடை.. அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ் பெற்றே விளங்கிக் கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் இதற்கு முன்பு சுற்றுலா தலங்களை முன்னோடியாக கொண்டு வருவாய் அதிகரித்து வந்தது.

ஆனால் தற்போது மதுபான விற்பனை புதுச்சேரி அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் கோடிக்கும் மேல் மதுபான விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி கலால் துறை தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மதுபான விற்பனை சலுகைகள் குறித்து எந்தவித சுவரொட்டிகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற எந்தவித விளம்பரங்களும் செய்யக்கூடாது என கலால் துறை தடை விதித்துள்ளது.

மேலும் இதனை மீறி செயல்பட்டால் விதிமிரல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No offer for wines in Puducherry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->