வெள்ளியங்கிரி மலையில் நாளை தான் கடைசி.. இனி மலையேற அனுமதியில்லை..!! - Seithipunal
Seithipunal



தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான கரடு முரடான பாதையைக் கொண்டுள்ள மலை என்றால் அது வெள்ளியங்கிரி மலை தான். இம்மலை கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. 

இது மொத்தம் ஏழு மலைகளைக் கொண்ட ஒரு மலைத்தொடர். இங்குள்ள ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்கவே பக்தர்கள் இந்த கடினமான மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர். மொத்தம் 6 கி. மீ. தூரம் கரடு முரடான பாதைகளில் பயணிக்க வேண்டும்.

மேலும் செங்குத்தான மலைப்பாதைகளையும் கடந்து தான் மலையுச்சியை அடைய முடியும். குறிப்பாக இதில் ஏழாவது மலையில் செல்லும் பயணம் தான் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இங்கு மலையேற ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான கோடை காலத்தில் மட்டுமே இங்கு மலையேற வனத்துறை அனுமதியளிக்கும். அந்தவகையில் தற்போது மே 31ம் தேதியான நாளையுடன் இந்த வருட மலையேற்றத்திற்கான அனுமதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் மலையேறி சுயம்பு லிங்கத்தை தரிசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நாளைக்கு பிறகு இனி இங்கு பொதுமக்கள் மலையேற அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No Permission For Public in Velliyangiri Hills


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->