தஞ்சை : விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வேட்புமனு நிராகரிப்பு.. இது தான் காரணமா ? - Seithipunal
Seithipunal


தேர்தலில் போட்டியிட போதிய வயது இல்லை என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் மனு நிராகரிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் களத்தில் இருக்கும் நிலையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் சுயட்சைகள் களம்காண்பதால் பலமுனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், விஜய்மக்கள் இயக்கத்தினரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு க்களை பரீசிலித்தனர்.


இந்நிலையில் 13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் போட்டியிட 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nomination filed-by the vijay people movement has been rejected


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->