வேலை செய்யும் இடத்தில் கஞ்சா வளர்ப்பு - வடமாநில தொழிலாளிகள் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். குடும்பமாக தங்கியுள்ள இவர்களுக்கு அங்கேயே குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தொழிற்சாலைக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக ஒசூர் மதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் படி, போலீசார் தொழிற்சாலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு 2 அடி உயரத்தில் 5 கஞ்சா செடி மரம் போல் வளர்ந்து நின்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், புக்கர் யாதவ்  என்பவர், வட மாநிலத்தவர்களுக்கும், தனது பயன்பாட்டிற்கும் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் புக்கர் யாதவை கைது செய்துள்ளனர். தொழிற்சாலையில் வடமாநிலத்தவர் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state youth arrest for growing kanja


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->