அடுத்த மூன்று மாதங்களுக்கு உஷார் மக்களே! கொசுவால் நோய் பரவும் அபாயம்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவ மழையால் நன்னீர் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும்!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றுவானது இனமும் 500க்கும் மேற்பட்ட சராசரி நிலையில் இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பொருத்தவரை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்கள் மட்டும் 1000 பேர் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவது தெரியவருகிறது.

இனி வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து சுகாதாரச் செயலாளர் செல்வநாயகம் கூறுகையில் "வடகிழக்கு பருமழை துவங்கியுள்ளதால் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை கொசுக்கள் பெருகும். இதன் காரணமாக அடுத்து மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை டெங்கு தடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்க கூடிய இடங்களை பொருட்களை கண்டறிந்து சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என பேட்டியளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northeast Monsoon rains increase dengu fever in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->