"கவனமாக செல்லவும்" என எழுதியதில் கவன குறைவு..! மக்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு பலகை..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டிலிருந்து மதுரை செல்லும் சாலையில், மல்லனம்பட்டி அருகே உள்ள வளைவான பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. 

இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பலகையையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளனர். 

அந்த பலகையில், 'மைய தடுப்பான் உள்ளது கவனமாக செல்லவும்' என்பதற்கு பதிலாக 'மையத் தடுப்பான் உள்ளது கவணமாக செல்வும்' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது "கவனம்" என்ற சொல்லில் "ற" நகர "ன" விற்கு பதில் "ட" நகர "ண" என்றும், "செல்லவும்" என்பதற்கு பதிலாக "செல்வும்" என்று எழுதப்பட்டுள்ளது. 

கவனமாக செல்லவும் என்பதில் கூட, கவனமின்றி பிழையுடன் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் செல்கின்றனர். ஆகவே, அறிவிப்பு பலகையில் உள்ள பிழையை திருத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice board which has written Go carefully was lacking


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->