குடிக்க வச்சி தாலியை அறுக்கறுது தான் அரசின் பொறுப்பா? - கொந்தளித்த சீமான்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களின் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆத்திரம் தான் வருகிறது. இந்த நாட்டில் அதிகபட்ச நிவாரணம் எதுக்கு கொடுக்கிறார்கள். சாராயம் குடிச்சி இறந்ததற்குத்தான். இது நாடா? சுடுகாடா?

குடிக்க வைச்சி தாலியை அறுக்கறுது தான் அரசின் பொறுப்பா? கள்ளச்சாராயம் குடிச்சி இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது. நீங்க 10 லட்சம் நிவாரணம் அறிவிக்க உடனே கள்ளச்சாராயம் குடிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு போனவன் மறுபடியும் கள்ளச்சாராயம் குடிக்கிறான். 

காரணம் அந்த 10 லட்சம் பணத்திற்காக... குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய்தான் குடிச்சி செத்தா 10 லட்சம் எப்படி இருக்கு... இதெல்லாம் கேவலம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman speech about kallakurichi issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->