சிறையெல்லாம் தேவையில்லை! சாட்டை துரைமுருகனை விடுவித்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவல் கோரப்பட்ட நிலையில், அதெல்லாம் அனுப்பத் தேவையில்லை என துரைமுருகனை விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைதும், அதன் பின்னணியும்:

அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த அவதூறாக துறைமுருகன் பேசியதாக திமுக தரப்பில் புகார் செய்யப்பட்டிருந்தது. 

மேலும் தற்போதைய தமிழக அரசையும் தரக்குறைவான வார்த்தைகளால் துரைமுருகன் விமர்சித்ததாக திமுக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த புகாரின் பெயரில் இன்று குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Saattai Duraimurugan Release TamilNadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->