இளைஞர்களை குறிவைத்து நிர்வாண வீடியோ கால்.. மிரட்டி பணம் பறிக்கும் இளம்பெண்கள்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியை சேர்ந்த 34 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது சமூக வலைதளமான முகநூலில் தகவல்களை பரிமாறி வந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் சகஜமாக பேசிய இருவரும் அடுத்த சில நாட்களில் நெருக்கமாக பழகியுள்ளனர். இதில் நம்மிடம் பேசுவது பெண்தானா என்பதை அறிய அந்த இளைஞர் முகநூலில் வீடியோ கால் செய்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணும் வீடியோ காலில் ஜாலியாக பேசியுள்ளார்.

அப்போது அந்தப் பெண் தனது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக பேசியுள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இதனை அந்தப் பெண் வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து 30,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு 10,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.

ஆனால், அந்த பெண் மேலும் 20,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பணம் சமூக வலைத்தளங்களில் நிர்வாண வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் புதுச்சேரி சைபர் கிராம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கையில் கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குறிப்பாக இளைஞர்கள் இதுபோன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nude video call blackmail money in pudhuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->