பருப்பு பாமாயிலுக்கு கொழுமுதல் செய்ய டெண்டர்! தமிழக அரசு சொல்லும் முக்கிய செய்தி!
Nuts are tender for palm oil Tamil Nadu government
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றன. இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில் மலிவுப் பொருட்களான சமையல் எண்ணெய் (பாமாயில்) மற்றும் துவரம் பருப்பு பெற்றுக் கொள்கின்றன.

நியாய விலைக் கடை:
இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஏழை எளியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த மலிவு பொருட்களை வழங்கி வருகிறது. வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை கொள்முதல் செய்து அவற்றைக் குறைந்த மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் விற்கிறது. இந்நிலையில், நியாய விலைக் கடைகளுக்கு தேவைப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளன.
டெண்டர்:
மேலும் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தடையின்றி துவரம் பருப்பும்,பாமாயிலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான 6,00,00,000 பாமாயில் பாக்கெட் மற்றும் 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
English Summary
Nuts are tender for palm oil Tamil Nadu government