அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் - ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

"தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக இறைவனை வழிபடும் தினமான தீபாவளிப் பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

திருமால் மற்றும் அன்னை மகாலட்சுமியின் துணைடன், நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை அழித்த தினம் தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள், ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாகவும், இருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது. 

இருள் மறைந்து ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்த நாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த தீபத் திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் தலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o pannerselvam deepavali wishes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->