பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர பெற்றோர் - புதுக்கோட்டையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருட காலமாக வைரவயல் பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி (எ) கிருத்திகாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு கடந்த 37 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் குழந்தை கடந்த 12ம் தேதி அவர்களது வீட்டு மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில், கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த கே.புதுப்பட்டி போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மோகனும், கிருத்திகாவும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் இருவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:- "முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் மற்றொரு பெண்ணுடன் குழந்தை பிறந்திருப்பது குறித்து நீதிமன்றத்தில் பிரச்சனை வரலாம் என்று கருதி, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, சடலத்தை தண்ணீர் தொட்டியில் மோகன் வீசி உள்ளதும், இதற்கு கிருத்திகாவும் உடந்தையாக இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைகேட்டு அதிர்ந்து போன போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரே, 37 நாளே ஆன குழந்தையை கொலை செய்து தொட்டியில் வீசி உள்ள சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oarents arrested for baby murder in putukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->