கொடூரம்! பெண்ணை குத்தி கொலை! முதியவர் செய்த கொடூர செயல்! - Seithipunal
Seithipunal


திட்டக்குடி அருகே வீட்டில் தனியாக இறந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் மணிமாறன். இவரது மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன் இறந்து விட்டதால் சின்ன பொண்ணு திட்டக்குடி அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவரது மூத்த மகன் மணிகண்டன் நேற்று காலை தாயைப் பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பாக கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் பின்பக்கமாக சென்று பார்த்தபோது  சின்ன பொண்ணு ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு  உள்ளே சென்ற பொது சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் 70 வயது முதியவர் இறந்துகிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெரில் அங்கு வந்த போலீசார்  இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தூக்கில் தொங்கி இறந்து இருப்பவர் யார் என்று விசாரணை செய்ததில் அவர் பெரம்பூர் மாவட்டம் லாடபுரம் பகுதியில் சேர்ந்து சதாசிவம் என்பது தெரிய வந்துள்ளது. அவர் அதே பகுதியில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சின்னப்பொண்ணு  வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர் உள்ளே சென்று சின்ன பொண்ணு மார்பு மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த கொலை எதனால் நடைபெற்றது? எதனால் அவள் தற்கொலை செய்து கொண்டார்? கள்ள காதல் தகராறு முதியவர் பெண்ணை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man hanged himself after stabbing to death a woman who died alone at home near Thitakkudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->