தேனி || கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் காவி விலக்கு அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் பெய்த கனமழையால், அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

அப்பொழுது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாயக்காள்(72) இடிப்பாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாயக்காளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman died in house wall collapse due to heavy rain in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->