தர்மபுரி: தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் தாராபுரம் அருகே வடதாரை காமராஜபுரம் பகுதியில் இஸ்மாயில்(61) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று மாலை பேருந்து நிலையத்திலிருந்து டீ கடைக்கு செல்வதற்காக தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இஸ்மாயில் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயிலை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman killed in Private college bus collision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->