ஒமிக்ரான் எதிரொலி : சற்றுமுன் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு.!
Omicron virus issue TN School Education Deportment Announce
கடந்த மாதம் 11 ம் தேதி ஆப்ரிக்காவில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிட்டுள்ளது. B.1.1.592 என்ற இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
இந்த வைரஸ் ஸ்பைக் புரோட்டினில் 32 வகைகளில் உருமாற்றம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ ஆகிய நாடுகளில் 300 மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், உலக நாடுகள் விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளன.
இதேபோல், நம் இந்திய நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து நாட்டு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சற்று முன்பு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில்,
அனைத்து பள்ளிகளிலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் நோய்த்தொற்று கட்டுப்பாடு முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும்.
மேலும் வகுப்புகளை நேரடியாகோவோ, ஆன் லைன் மூலமாக நடத்திக்கொள்ளலாம்.
காலை இறைவணக்கம், கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
English Summary
Omicron virus issue TN School Education Deportment Announce