கன்னியாகுமரி : ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - ஒருவர் பலி
One killed in a fire at a rubber estate in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரப்பர் தோட்டத்திற்கு நடுவே 60 வயது மதிக்கதக்க ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் தோட்டத்திற்கு நடுவே தீயில் சிக்கிக் கொண்டவர், பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் பிரசன்னா என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
One killed in a fire at a rubber estate in kanniyakumari