சீமான் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்!
One more party functionary resigns from Seeman
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிஉள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.சமீபத்தில் கொள்ளகை பரப்பு செயலாளர் விலகிய நிலையில் மேலும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் விலகிவருகின்றனர்.அப்படி விலகி வருபவர்கள் சீமானின் நடவடிக்கை சரியில்லை என குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம் என்றும் இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் விலகிவருவது சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
English Summary
One more party functionary resigns from Seeman