ரூ.100 கோடி நிலம் மோசடி! எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் திடீர் திருப்பம்! சென்னை சேர்ந்த மேலும் ஒருவர் கைது! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் குமார் ஆகியோர் கல்லூரி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பில்லான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் கரூர் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது ஆதரவாளர் பிரவீன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அடுத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 16ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலை மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் இரண்டு நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.  இதுநிலையில் கொலை மிரட்டல் வழக்கில் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வாங்கள் போலீசார் இன்னொரு மனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இரண்டு பேரையும் ஒரு நாள் காவலில் போலீசார் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த நிலையில் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு உதவியாக சென்னை விரிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் பிரிதிவிராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சிபிசிஐடி சென்னையில் முகமிட்டு கண்காணித்து வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் இன்று காலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more person from Chennai arrested in MR Vijayabaskar case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->