தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது; அது அடிப்படை உரிமை என்பது போன்ற கருத்துகள் மனிதகுலத்திற்கு எதிரானவை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் முகவர்களால் பரப்பப்படுகின்றன.

ஆனால், ஆன்லைன் சூதாட்டம் கணினியுடன் ஆட கூடிய ஒரு சூதாட்டம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. பணத்தை இழந்து நிம்மதி இழந்து இதுவரை 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த கொடூர அரக்கன் ஆன்லைன் ரம்மி சூதட்டத்திற்கு தடை விதித்து இயற்றிய இரண்டாவது சட்டத்திற்கு அண்மையில் தான் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். அதன் பிறகும் ஒருசில மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன..

மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை வழக்கு பட்டியலிடப்படும். இல்லையெனில் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Gambling law Chennai HC New case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->