சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்... ஊட்டி மலை ரெயில் சேவை திடீர் ரத்து.! - Seithipunal
Seithipunal


கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து  ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்து சில நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

மேலும் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று மற்றும் நாளை நீலகிரி ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே இன்று மற்றும் நாளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty hill train service cancelled


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->