விடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் :

விடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார். 

இவர் மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.

இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை அதிகாரச் சட்டம் 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மேலும், இவர் ஜமீன்தார் இனமுறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மிகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.

நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

op ramaswamy reddiyar birthday 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->