தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு? எதிர்க்கட்சிகளால் அதிரப்போகும் தமிழக சட்டசபை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் நாளான நேற்று அதிமுக சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வு குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானமானது இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நேற்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 

அதன்படி அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் தா.மோ அன்பரசன் இன்று பதில் அளிப்பார். மேலும் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தின் இரண்டாவது நாளில் 7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முக்கியமாக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை சார்பில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. வணிக வரியை இனிமைப்படுத்துதல் 10 ஆண்டுகளுக்கு மேல் வணிகவரி செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் வணிகவரி வசூலிப்பதுக்கான சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. 

தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டம் உன் முடிவு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க இந்த சட்டம் 3 முடிவானது தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட உள்ளது. 

அதே போன்று தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட முன் வடிவு, தமிழ்நாடு பட்டுப்புழு விதை திருத்த சட்ட முன் வடிவு, நிலையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பான திருத்த சட்டம் முன் வடிவு கொண்டுவரப்பட உள்ளது. அதே நேரத்தில் அதிமுக சார்பில் நீண்ட நாட்கள் சிறையில் வாழும் இஸ்லாமிய கைகளை விடுவிப்பது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும், தமிழகத்தில் சாதிவாரிக் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இணைந்து கவனிக்க தீர்மானம் கொண்டு திட்டமிட்டுள்ளன. இதனால் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties bring attention resolution for insisting on castewise census


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->